மாமல்லபுரம் கற்சிற்பங்கள் புவிசார் குறியீட்டை பெற்றது
November 28 , 2017 2554 days 1143 0
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்து கைவினை கற்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு புவிசார் குறியீட்டு பதிப்பகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
அழகு நேர்த்தியுடைய இந்த கற்சிற்ப செதுக்கு தொழிற்நுட்பமானது கி.பி.ஏழாம் நூற்றாண்டில் உருவானது.
மாமல்லன் (பெரும் மற்போராளன்) என்று அழைக்கப்படும் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவனின் பெயர் கொண்டு இந்த இடத்திற்கு மாமல்லபுரம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பல்லவ வம்சமானது கி.பி.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்தது. மாமல்லபுரம் என்ற துறைமுக நகரத்தை கலை மற்றும் கட்டிடக் கலையின் மையமாக உருவாக்கியதில் முக்கிய பங்கு ஆற்றியவர்கள்.
கற்சிற்ப கலைக்கு பல்லவ மன்னர்கள் பெரும் பங்களிப்பு ஆற்றியவர்களாவர்.
அவர்களாவர்,
மகேந்திரவர்மன் (கி.பி.580- கி.பி 680)
முதலாம் நரசிம்மவர்மன் அல்லது மாமல்லன் (கி.பி.630- கி.பி 668)
பரமேசுவர வர்மன் (கி.பி.672- கி. பி700)
இரண்டாம் நரசிம்ம வர்மன் அல்லது ராஜசிம்மன் (கி.பி.700- கி.பி 728)
இச்சிற்ப கலையில், பெரும் அடர்த்தியும், பெரும் விலைமதிப்பும் உடைய கிரானைட் கற்களுக்குப் பதிலாக நீல உலோகங்கள் (Blue Metal) பயன்படுத்தப்பட்டுள்ளன.
புவிசார் குறியீடு - தமிழ்நாடு
அதிக எண்ணிக்கையிலான பொருட்களுக்கு புவிசார் குறியீடு உடைய மாநிலங்களின் கணக்கில், தமிழ்நாடு முதலிடத்திலும், உத்திரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
டார்ஜிலிங் டீ ஆனது புவிசார் குறியீடு பெற்ற முதல் இந்திய உற்பத்திப் பொருளாகும்.
புவிசார் குறியீடு பெற தமிழகம் இதுவரை 50 பொருட்களை புவிசார் குறியீடு பதிப்பகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அவற்றில் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இவற்றுள் காஞ்சிப்பட்டு மிகவும் புகழ்பெற்றது.
இதுவரை திண்டுக்கல் பூட்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.