கணினித் துறை சார்ந்த அறிவியலாளர் ஹரி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான மார்கோனி பரிசு வழங்கப் பட்டுள்ளது.
"கம்பிவடம் சார்ந்த மற்றும் சாராத வலையமைப்புகள், தொலை உணர்வு மற்றும் விநியோக அமைப்புகள் ஆகியவற்றில் அவர் ஆற்றிய அடிப்படைப் பங்களிப்புகளுக்காக" அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
மார்கோனி பரிசு என்பது அமெரிக்காவில் அமைந்துள்ள மார்கோனி என்ற அறக்கட்டளையால் வழங்கப் படுகிற, கணினித்துறை சார்ந்த அறிவியலாளர்களுக்கு வழங்கப் படும் ஒரு சிறந்த அங்கீகாரம் ஆகும்.
"மேம்பட்ட தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் எண்ணிம உள்ளடக்கத்தை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியவர்களுக்கு" இந்த விருதானது வழங்கப்படுகிறது.
டாக்டர் பாலகிருஷ்ணன் இதற்கு முன்பு இன்ஃபோசிஸ் பரிசு (2020) மற்றும் IEEE கோஜி கோபயாஷி கணினி மற்றும் தகவல் தொடர்பு விருது (2021) ஆகியவற்றைப் பெற்று உள்ளார்.