அண்டை மாநிலமான கர்நாடகாவில் யார்கோல் என்னுமிடத்தில், மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணையானது மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கப் படும் தென்பெண்ணை – பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் மீது மிகுந்த எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
கர்நாடகாவானது யார்கோல் அணையில் நீரைத் தடுத்துச் சேமித்தால் பெண்ணை ஆற்றிற்கு வரும் நீர்வரத்து குறையும்.
இதனால் பருவ மழைக்காலத்தின் போது ஏராளமான நீரைப் பெறும் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீர்வரத்து குறைக்கப்படும்.
இது வட தமிழகத்தின் வடிநிலப் பகுதிகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பு
தென்பெண்ணை – பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டம் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியில் பாயும் பாலாற்றிற்கு தென்பெண்ணை ஆற்றிலிருந்து 3 டிஎம்சி அளவு நீரானது கொண்டு வரத் திட்டமிடப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும்.