TNPSC Thervupettagam

மார்பர்க் வைரஸ் நோய் பெருந்தொற்று

February 19 , 2023 518 days 251 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது எக்குவடோரியல் கினியாவில் முதன்முதலில் மார்பர்க் நோய் பெருந்தொற்று ஏற்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளது.
  • மார்பர்க் நோயானது மிக அதிக அளவில் தொற்றக் கூடியதாகும்.
  • மார்பர்க் வைரஸ் மற்றும் எபோலா வைரஸ் ஆகிய இரண்டும் ஃபிலோவிரிடே என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையாகும், என்றாலும் அவை வெவ்வேறு வைரஸ்களால் ஏற்படுகின்றன.
  • இந்த வைரஸ் ஆனது, மனிதர்களில் 88% வரையிலான அதிக இறப்பு விகிதத்துடன் கூடிய தீநுண்மக் குருதிப் போக்கு காய்ச்சல் ஏற்பட வழிவகுக்கிறது.
  • இந்த நோயானது, 1967 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மார்பர்க் மற்றும் பிராங்பர்ட் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் ஏற்பட்டதையடுத்து இந்த நோய்த் தொற்று குறித்து முதன்முதலில் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்