TNPSC Thervupettagam

மார்பர்க் வைரஸ் நோய் – தான்சானியா

April 8 , 2023 599 days 265 0
  • தனது நாட்டில், கொடிய மார்பர்க் வைரஸ் நோயின் முதலாவது பாதிப்பு பதிவு செய்யப் பட்டுள்ளதாக தான்சானியா அரசு அறிவித்துள்ளது.
  • மார்பர்க் வைரஸ் நோயானது முதன்முதலில் 1967 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மார்பர்க் மற்றும் பிராங்பர்ட் மற்றும் செர்பியாவின் பெல்கிரேடு ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இது எபோலாவினை ஏற்படுத்தும் வைரசினுடைய அதே "வைரஸ் குடும்பத்தினை" சேர்ந்தது ஆகும்.
  • இது கடுமையான தீநுண்மக் குருதிப் போக்குக் காய்ச்சலினை ஏற்படுத்துவதோடு, இந்நோயின் இறப்பு விகிதம் ஆனது 24% முதல் 88% வரை என மாறுபடுகிறது.
  • இது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து பல பெருந்தொற்றுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 2004-2005 ஆம் ஆண்டில் அங்கோலாவில் ஏற்பட்ட பெருந்தொற்றில் 227 பேர் உயிரிழந்தனர்.
  • இந்த வைரஸ் ஆனது ஆரம்பத்தில் பழம் உண்ணும் வெளவால்களிலிருந்து மக்கள் மத்தியில் பரவுகிற நிலையில், அதற்குப் பிறகு உடல் திரவங்கள் அல்லது மாசுபட்டப் பொருட்களின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்குப் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்