TNPSC Thervupettagam

மார்பர்க் வைரஸ் – ருவாண்டா

October 11 , 2024 43 days 74 0
  • ருவாண்டாவில் இதுவரையில் அறியப்பட்ட மிக கொடிய நோய் கிருமிகளில் ஒன்றான மார்பர்க் வைரஸால் ஏற்பட்ட புதிய நோய் பாதிப்பு உச்ச நிலையினை அடைந்துள்ளது.
  • மார்பர்க் வைரஸ் நோய் (MRV) என்ற பெயர் ஆனது முதலில் மேற்கத்திய நாடுகளில் தெரிவிக்கப்பட்டது.
  • இது 1967 ஆம் ஆண்டில் ஜெர்மனி மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இருந்த ஆய்வகங்களில் இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.
  • மார்பர்க் வைரஸ் உடலில் மிக விரைவாக பரவி, இரத்தம், கல்லீரல் மற்றும் தோலில் உள்ள செல்களை பாதித்து அழிக்கும்.
  • தற்போதைய புள்ளி விவரங்கள் ஆனது MRV நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே 88% உயிரிழப்பு விகிதத்தைக் குறிப்பிடுகின்றன.
  • மார்பர்க் வைரஸ் ‘விலங்குவழித் தொற்றக் கூடிய வைரஸ்’ ஆகும், அதாவது நீண்ட கால வெளிப்பாடு காரணமாக விலங்குகளிலிருந்து இது மனிதர்களுக்கு தொற்றக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்