TNPSC Thervupettagam

மாறி வரும் போக்குகள் மற்றும் வருமான சமநிலையின்மை

November 1 , 2023 389 days 342 0
  • வருமான வரித் துறையானது 2019-20 முதல் 2021-22 ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளது.
  • 2020-21 ஆம் நிதியாண்டில், மொத்தம் 6.75 கோடி வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
  • இது முந்தைய ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 6.39 கோடியை விட 5.6 சதவீதம் அதிகம் ஆகும்.
  • கூடுதலாக, சுமார் 2.1 கோடி வரி செலுத்துவோர் வரி செலுத்தியிருந்தாலும் அவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பது ஒரு தொடர்ச்சியான சிக்கலாக உள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டில் 5.87 கோடியாக இருந்த மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கையானது 2021-22 ஆம் ஆண்டில் 6.75 கோடியாக உயர்ந்துள்ளது.
  • 2013-14 ஆம் ஆண்டில் மொத்த வருமானத்தில் 17 சதவீதத்தினை ஈட்டிய வருமான வரி செலுத்துபவர்களில் முதல் 1 சதவீதத்தினர், 2021-22 ஆம் ஆண்டில் 23 சதவீதத்தினை ஈட்டுபவர்களாக உள்ளனர்.
  • அதி உயர் பணக்காரர்களின் வருமான வளர்ச்சியானது நடுத்தர வர்க்கத்தினரை விட அதிகமாக உள்ளது.
  • அடிமட்ட 25 சதவீத வரி செலுத்துவோரை விட உயர்மட்ட 1 சதவீதம் பேரின் வருமான வளர்ச்சி 60 சதவீதம் வேகமாக உள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டிற்கு சுமார் 7.41 கோடி வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதில் 53 லட்சம் தாக்கல்கள் முதல் முறையாகப் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்