தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட மாறுபக்கக் கொழுப்புகளை ஒழிப்பதற்காக உலக சுகாதார நிறுவனமானது சர்வதேச உணவு மற்றும் பானக் கூட்டிணைவுடன் (IFBA - International Food and Beverage Alliance) இணைந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவின் சுவை, அமைப்பு மற்றும் கால அளவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக செயற்கையான மாறுபக்கக் கொழுப்புகளைப் உணவுத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த உணவு வகைகளில் மாறுபக்கக் கொழுப்பானது, “பகுதி ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள்” என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
ஹைட்ரஜனேஷன் ஆனது திரவ எண்ணெய்களை திடமாக்கும். அது அவற்றைக் கொண்டிருக்கும் உணவின் ஆயுட் காலம் மற்றும் சுவையை அதிகரிக்கும்.
மாறுபக்கக் கொழுப்புகளானது குறைந்த அடர்த்தி கொண்ட தீய லிப்போ புரதங்கள் (LDL - Low density lipoproteins) கொழுப்பு மற்றும் அதிக அடர்த்தி கொண்ட லிப்போ நல்ல புரதங்கள் (HDL - High density lipoproteins) ஆகியவற்றைக் குறைக்கின்றது.
அதிகபட்ச LDL கொழுப்பானது இருதய நோயை ஏற்படுத்துகின்றது.
இதயத் தமனி நோயினால் உலக அளவில் 5,00,000 இறப்புகளுக்கு மாறுபக்கக் கொழுப்பு காரணமாக அமைகின்றது.