TNPSC Thervupettagam

மாறுபக்கக் கொழுப்புகள் - விழிப்புணர்வு

February 18 , 2019 1980 days 533 0
  • வணிக ரீதியாக கிடைக்கப் பெறும் உணவுப் பொருட்களில் உள்ள மாறுபக்கக் கொழுப்புகளின் தீமையான விளைவுகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செயல் நடவடிக்கையை கேரளாவின் சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.
  • மேலும் மாறுபக்கக் கொழுப்புகளுக்கென்று தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான தகுதிநிலைகளை அவை பூர்த்தி செய்வதற்காக உள்ளூர் உணவு உற்பத்தி தொழிற்சாலைகளை அந்த செயல் நடவடிக்கை ஊக்குவிக்கின்றது.
  • இந்த ஓராண்டு கால செயல்திட்டமானது பின்வரும் குறிப்பிட்ட இலக்குகளின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
    • உணவு வணிக நிறுவனங்களிடையே மாறுபக்கக் கொழுப்பு மற்றும்
    • உணவு வகைகளை மாறுபக்கக் கொழுப்பற்ற வகையில் எவ்வாறு பாதுகாப்பது குறித்து அறிவியல்பூர்வ அமர்வுகள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்.
  • உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி,
    • மாறுபக்கக் கொழுப்பு உட்கொள்ளுதலானது மொத்த ஆற்றலை எடுத்துக் கொள்ளுதலில் 1 சதவிகிதத்திற்குக் கீழ் இருக்க வேண்டும்.
    • இது 2023 ஆம் ஆண்டில் உலக உணவு விநியோகித்தலில் மாறுபக்கக் கொழுப்பை முழுமையாக ஒழித்தலை ஏற்படுத்த எண்ணுகின்றது.
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையமானது (Food Safety and Standards Authority of India - FSSAI) உணவில் மாறுபக்கக் கொழுப்பின் வரம்பு 2 சதவிகிதம் என பரிந்துரைத்துள்ளது. மேலும் இது 2022 ஆம் ஆண்டில் உணவிலிருந்து மாறுபக்கக் கொழுப்பை ஒழிக்க எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்