TNPSC Thervupettagam

மாறுபக்க கொழுப்பு அளவுகள்

January 8 , 2021 1328 days 1048 0
  • சமீபத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது அனைத்து உண்ணத் தகுந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள், காய்கறி கொழுப்புகள், வனஸ்பதி, செயற்கை வெண்ணெய், துரித உணவுப் பொருட்கள் மற்றும் கலப்பு கொழுப்புகள் ஆகியவை 3% அல்லது அதற்கும் குறைவான அளவில் மட்டுமே மாறுபக்கக் கொழுப்புகளையே கொண்டு இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
  • மேலும் இது மாறுபக்கக் கொழுப்பை 2022 ஆம் ஆண்டில் 2% ஆகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் இந்தியா முதன்முதலாக மாறுபக்க கொழுப்பு அளவை 10% அளவில் கொண்டு இருக்க வேண்டும் என்ற வரம்பிற்கு ஒரு ஆணையைப் பிறப்பித்து இருந்தது.
  • மேலும் இது 2015 ஆம் ஆண்டில் 5% ஆகக் குறைக்கப் பட்டது.
  • உலக சுகாதார அமைப்பானது 2023 ஆம் ஆண்டில் மாறுபக்கக் கொழுப்பின் உலகளாவிய அளவிலான ஒழிப்பிற்கு வேண்டி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
  • மாறுபக்க கொழுப்புகள் காய்கறி எண்ணெய்களின் ஹைட்ரஜனேற்ற முறைச் செயல்பாடுகளின் போது செயற்கையாக உருவாக்கப்படுகின்றன.
  • இவை பகுதியளவில் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட காய்கறி எண்ணெய்களிலிருந்து உற்பத்தி செய்யப் படுகின்றன.
  • இந்தப் பகுதியளவு ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்யானது மாறுபக்க கொழுப்பிற்கு மிக முக்கிய ஒரு ஆதாரமாக விளங்குகின்றது.
  • மாறுபக்க கொழுப்பின் நுகர்வானது இருதய நோய்களுக்கு வழிவகுக்கின்றது.
  • உலகில் மாறுபக்க கொழுப்பு குறித்த அதிக சுமை காரணமாக மிக அதிக இருதய நோய் பாதிப்புகளை இந்தியா கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்