2022 ஆண்டிற்குள் மாறுபக்க கொழுப்பற்ற (Trans Fat free) இந்தியாவை உருவாக்குவதை மத்திய சுகாதார அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாறுபக்க கொழுப்பு என்பது பகுதியளவில் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணெய்கள், வேக வைத்த மற்றும் வறுத்த உணவு ஆகியவற்றில் உள்ள ஓர் உணவு நச்சு ஆகும்.
நாட்டில் தொற்றா நோய்கள் (non-communicable diseases) அதிகரிப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணமாகும்.
மாறுபக்க கொழுப்பானது இருதய நோய்களுக்கான ஓர் இடர்க் காரணியாகும் (risk factor).
இது சம்பந்தமாக, FSSAI அமைப்பின் (Food Safety and Standards Authority of India - இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்) 'சரியான உணவு உண்ணும் இந்தியா இயக்கம்' என்ற இயக்கமானது அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவைச் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான முறையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.