மாறும் நிலை கொண்ட நிலத்தடி நீர் ஆதார மதிப்பீட்டு அறிக்கை 2023
December 9 , 2023 351 days 240 0
இந்த அறிக்கையை நாடு முழுவதற்குமாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்பு 1980, 1995, 2004, 2009, 2011, 2013, 2017, 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
நிலத்தடி நீர் ஆதாரங்களின் தற்போதைய நிலைகளையும், நிலத்தடி நீர் மேலாண்மை நடைமுறைகளின் தாக்கத்தினையும் தீர்மானிப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையின்படி, நாடு முழுவதற்கும் தேவையான மொத்த ஆண்டு நிலத்தடி நீரின் மீள்நிரப்பானது 449.08 பில்லியன் கன மீட்டர் (BCM) ஆகும்.
மேலும் நாட்டின் ஒட்டு மொத்த தேவைக்காக ஆண்டுக்கு 241.34 BCM நிலத்தடி நீரானது பிரித்தெடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.
இது முந்தைய ஆண்டினை விட (2022) 11.48 BCM அதிகரித்திருப்பதைக் குறிக்கிறது.
மேலும், நாட்டிலுள்ள மொத்த மதிப்பீட்டு அலகுகளான 6553 என்ற அலகில், 4793 என்ற அளவிலான அலகுகளானது ‘பாதுகாப்பானது’என்றும் 736 அலகுகள் ‘அதிக அளவில் சுரண்டப்பட்டவை என்றும் இதில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.