TNPSC Thervupettagam

மாற்றியமைக்கப்பட்ட இலவச சிகிச்சை திட்டம்

January 13 , 2025 2 days 49 0
  • மத்திய அரசானது, 'இலவச சிகிச்சை' திட்டத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட வடிவத்தினை வெளியிட்டுள்ளது.
  • இது சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்த முன்னெடுப்பின் கீழ், ஏழு நாட்கள் வரையிலான சிகிச்சைக்கான 1.5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவச் செலவினங்களை அரசாங்கம் ஏற்கும்.
  • இந்த உதவியினைப் பெறுவதற்கு வேண்டி, விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
  • விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற வகை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்