மாற்றுத் திறனாளிகளுக்கான உலகின் முதல் ஐ.டி வளாகத்தை தெலுங்கானா அரசு அமைக்க உள்ளது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 அன்று மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்துவதை மையமாக கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஐ.டி. வளாகத்தை அமைக்க தெலுங்கானா மாநில அரசானது வித்யான் இ-இன்போ மீடியா எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் அருகில் மாநில அரசால் 10 ஏக்கர் அளவில் அமைக்கப்பட்டு வரும் ஐ.டி. தொழில்நுட்ப பூங்காவில் இந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது.