மாற்றுத் திறனாளிகளுக்காக சைகை மொழியில் தேசிய கீதம்: மத்திய அரசு வெளியீடு
August 11 , 2017 2764 days 1106 0
மாற்றுத் திறனாளிகளுக்காக சைகை மொழியில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சுமார் 35 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே வெளியிட்டார். டில்லி செங்கோட்டையின் பின்னணியில், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுடன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இணைந்து சைகை மொழியில் தேசிய கீதத்தை வழங்கியுள்ளனர். இதனை பிரபல திரைப்பட இயக்குனர் கோவிந்த் நிஹலானி இயக்கியுள்ளார்.
மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்த தேசிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது.