சூழல்கள், சேவைகள் மற்றும் வாய்ப்புகளை அணுகுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய உரிமை ஆனது அத்தியாவசியமான மனித மற்றும் அடிப்படை உரிமை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
டெல்லியில் பொதுப் போக்குவரத்திற்காக 3,775 தாழ்தள சக்கர நாற்காலிகளை இயக்கக் கூடிய வகையிலான CNG எரிபொருளில் இயங்கும் பேருந்துகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1,917 பேருந்துகள் மட்டுமே உள்ளன என்று நீதிமன்றம் பதிவு செய்தது.
அனைவருக்கும் அணுகக் கூடிய பொது மற்றும் தனியார் இடங்கள், சேவைகள் மற்றும் "அனைவருக்கும் உகந்த வடிவமைப்பு சார்ந்த" தயாரிப்புகளை உருவாக்குமாறு உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திடம் கூறியுள்ளது.