TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 – சீனா

November 1 , 2023 260 days 261 0
  • இந்திய அணியானது 2023 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்கள் என்ற அளவிலான சிறந்தப் பதக்க எண்ணிக்கையுடன் தனது பங்கேற்பினை நிறைவு செய்ததது.
  • இதில் 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
  • இந்தியாவின் இந்த சாதனை அளவிலான பதக்க எண்ணிக்கையானது, 2018 ஆம் ஆண்டில் பெற்ற 72 பதக்கங்களை விட அதிகமாகும்.
  • 2014 ஆம் ஆண்டில் மூன்று தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்ற இந்திய அணியின் 29 தங்கப் பதக்கங்கள் தற்போது ஒரு புதிய சாதனை எண்ணிக்கையாகும்.
  • ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் 111 பதக்கங்களில் 40 பதக்கங்களை வென்று, பதக்கம் வென்ற இந்திய அணியில் 37 சதவீதப் பங்கினை மகளிர் அணி கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்