TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார சம பங்கு குறித்த உலக அறிக்கை

December 15 , 2022 581 days 313 0
  • மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார சமபங்கு குறித்த உலகளாவிய அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு, சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் ஒப்பிடும் போது, அகால மரணம் மற்றும் நோய்க்கு உள்ளாகும் அபாயம் அதிகமாகும்.
  • முறையான மற்றும் தொடர்ச்சியான சுகாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, அவர்கள் குறைபாடுகள் இல்லாதவர்களை விட 20 ஆண்டுகளுக்கு முன்பே இறக்கும் அபாயம் அதிகமாகும்.
  • ஆஸ்துமா, மனச்சோர்வு, நீரிழிவு, உடல் பருமன், வாய்வழி நோய்கள் மற்றும் பக்க வாதம் போன்ற நாட்பட்ட நோய்கள் உருவாகக் கூடிய அபாயம் இவர்களில் இருமடங்கு அதிகமாகும்.
  • தற்போது, உலகம் முழுவதும் உள்ள ஆறில் ஒருவருக்கு (1.3 பில்லியன்) குறிப்பிடத்தக்க வகையிலான குறைபாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்