மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை மற்றும் தீர்வு வழங்கீட்டு மையங்கள் – தமிழ்நாடு
February 19 , 2024 280 days 253 0
மாநில மாற்றுத் திறனாளிகள் நலத்துறையானது விரைவில் துணைப்பிரிவு மட்டத்திலான பகுதிகளில் 39 மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை மற்றும் தீர்வு வழங்கீட்டு மையங்களை (OSCs) நிறுவவுள்ளது.
இது உலக வங்கியின் நிதியுதவியினைப் பெறும் RIGHTS திட்டத்தின் கீழ் உருவாக்கப் படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் (PwD) குறை தீர்ப்பிற்காகப் பயணிக்கும் தூரத்தை அவை குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த மையங்களில் உளவியலாளர், உடல் இயன்முறை மருத்துவர், பேச்சு ஒலியியல் நிபுணர், தொழில்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் சிறப்புக் கல்வியாளர்கள் உட்பட ஒன்பது நிபுணர்கள் இருப்பர்.
RIGHTS என்பது உண்மையான மனித முன்னேற்ற ஆதரவுக்கான மறுவாழ்வு முன்னெடுப்பு என்பதைக் குறிக்கிறது.