TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் பேட்மிண்டன் பயிற்சி நிலையம்

January 26 , 2022 906 days 429 0
  • இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் பேட்மின்டன் பயிற்சி நிலையம் உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் நிறுவப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்கினை இது மேம்படுத்தும்.
  • 2024 ஆம் ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டிகளானது பிரான்சின் பாரீஸ் நகரிலுள்ள ஸ்டேடே டி பிரான்ஸ் என்ற மைதானத்தில் நடைபெற உள்ளது.
  • இந்தப் பயிற்சி மையமானது இந்திய மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மின்டன் அணியின் தேசியத் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கன்னா என்பவரால் ஏஜீஸ் ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன்  இணைந்து தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்