மாற்றுத் திறனாளிகளுக்கு இடங்களை அணுக உதவும் 'பில்லியன்அபில்ஸ்’ செயலி
July 25 , 2017 2724 days 1082 0
மாற்றுத் திறனாளிகள் அணுகக் கூடிய வசதி வாய்ப்புகள் அமைந்துள்ள இடங்களைக் கண்டுபிடித்து உதவும் விதமாக, ‘பில்லியனபில்ஸ்’ (Billionables) என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசியமான சரிவுமேடை, விசைத்தூக்கி, படிக்கட்டுகள் இல்லாத இடங்கள், பார்வையற்றோருக்கான பிரெய்ல் எழுத்து முறை, வரைபடச்செய்திகள், சைகை மொழி, கோதுமைப்புரதம் அற்ற உணவுகள் போன்றவை எங்கு அமைந்திருக்கின்றன என்பதை வரைபடத்தொடு இந்தச் செயலி காண்பிக்கும்.
பில்லியனபில்ஸ் செயலியில் வழிகாட்டியும், இடங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்கான வசதியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அவர்கள் அணுகக்கூடிய இடங்களை செயலியில் பதிவிடும் மக்களுக்கு வெகுமதிப்புள்ளிகள் அளித்து ஊக்கப்படுத்தப்படும்.
பில்லியனபில்ஸ் என்பது சமூகஆர்வத்துடன் தொடங்கப்பட்ட தொடக்கநிலை நிறுவனம் ஆகும். மாற்றுத்திறனாளியான சமீர்கார்க் என்பவர் இதனை நிறுவியுள்ளார்.