மாற்றுத் திறனாளிகள் மற்றும் பேரிடர்கள் பற்றிய உலகளாவிய கணக்கெடுப்பு 2023
October 22 , 2023 399 days 271 0
ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் ஆனது (UNDRR) 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு உலகளாவியக் கணக்கெடுப்பினை நடத்தியது.
உலக மக்கள் தொகையில் 16 விழுக்காட்டினர் ஏதோவொரு வகையான உடல் திறன் இழப்பு கொண்டவராகவும் மற்றும் பிற மக்களை விட இரண்டு அல்லது நான்கு மடங்கு அதிகமாக பேரழிவுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 84 சதவீதம் பேர் அவசரக் கால வெளியேறும் வழிகள், தங்குமிடங்கள் அல்லது அவசரகாலப் பொருட்கள் பொதி வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி அறியாமல் உள்ளனர்.
இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் உள்ளூர் பகுதியில் உள்ள பேரிடர் மேலாண்மை திட்டம் பற்றி அறிந்துள்ளனர்.
2030 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 560 பேரழிவுகளை உலக நாடுகள் எதிர்கொள்ளும் என்று இந்தக் கணக்கெடுப்பு கணித்துள்ளது.