TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளி நபர்களின் உரிமைகள் தொடர்பான விதிகள் 2024 (திருத்தம்)

October 28 , 2024 33 days 99 0
  • மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் (RPwD) தொடர்பான விதிகளில் பல்வேறு புதியத் திருத்தங்களை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.
  • மாற்றுத் திறனாளிச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட மாற்றுத் திறனாளி அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பச் செயல்முறையை ஒழுங்குமுறைப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அணுகல் தன்மையை மேம்படுத்தச் செய்வதோடு மாற்றுத் திறனாளிகளுக்கு என்று சேவைகளைத் திறம்பட வழங்கும்.
  • இனி, ​​குறிப்பிட்ட குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி நபர்கள் UDID இணைய தளம் மூலம் மாற்றுத் திறனாளி சான்றிதழ்கள் மற்றும் UDID அட்டைகளுக்கு என்று இதில் விண்ணப்பிக்கலாம்.
  • குறைபாடுகளின் பல்வேறு நிலைகளைக் குறிக்கும் வண்ணக் குறியிடப்பட்ட UDID அட்டைகளையும் இந்தத் திருத்தங்கள் அறிமுகப்படுத்துகின்றன:
    • 40 சதவீதத்திற்கும் குறைவான குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளை நிற அட்டை,
    • 40-79 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மஞ்சள் நிற அட்டை மற்றும்
    • 80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுடையவர்களுக்கு நீலநிற அட்டை.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் 4% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • ஆனால் தலாசீமியா, இரத்தம் உறையாமை நோய் (ஹீமோபிலியா) மற்றும் அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் போன்ற இரத்தக் கோளாறுகள் உள்ளவர்கள் PwD பிரிவின் கீழ் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடுகளைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்