TNPSC Thervupettagam

மாற்று நோபல் பரிசு - கிரெட்டா துன்பெர்க்

September 26 , 2019 1768 days 761 0
  • வாழ்வாதார உரிமைகள் விருதை வென்றவர்களாக அறிவிக்கப்பட்ட நான்கு நபர்களில் ஸ்வீடனின் காலநிலை ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் என்பவரும் ஒருவராவார்.
  • இந்த விருதானது "மாற்று நோபல் பரிசு" என்றும் அழைக்கப்படுகின்றது.
  • விஞ்ஞான உண்மைகளைப் பிரதிபலிக்கும் அவசர காலநிலை நடவடிக்கைகளுக்கான அரசியல் சார்ந்த தேவைகளை ஊக்குவிப்பதற்கும் பெருக்கிக் கொள்வதற்கும் துன்பெர்க் அங்கீகரிக்கப் படுகின்றார்.
  • இதர வெற்றியாளர்கள் பின்வருமாறு;-

வெற்றியாளர்

பங்களிப்பு

டேவி கோபெனாவா மற்றும் ஹுட்டுகாரா யனோமாமி கூட்டமைப்பு

பிரேசிலியப் பழங்குடியினரைப் பிரதிநிதித்துவப் படுத்தியதற்காகவும் அமேசான் வனத்தையும் அதன் மக்களையும் பாதுகாத்ததற்காகவும்

சஹாராவி காந்தி என்றும் அழைக்கப்படும் மொராக்கோ ஆர்வலர் அமினாடூ ஹைதர்

ஒரு மனித உரிமை வழக்குரைஞர் மற்றும் மேற்கு சஹாராவின் சுதந்திரத்திற்கு அவரது வன்முறையற்ற போராட்டத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது

சீனாவின் வழக்குரைஞரான  ஜியோ ஜெயின்மெய்

 

சீனாவில் பெண்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்ததற்காக

 

இந்த விருது பற்றி
  • இந்த விருதானது 1980 ஆம் ஆண்டில் ஸ்வீடன்-ஜெர்மனியரான கொடையாளர் ஜகோப் வான் யுஎக்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது.
  • இந்தப் பரிசின் நிறுவனர் அதிக நற்செயல்களைச் செய்தார். ஆனால் அது  நோபல் பரிசுகளால் புறக்கணிக்கப்படுவதாக அவர் உணர்ந்தார். இந்த வருடாந்திர வாழ்வாதார உரிமைகள் விருதானது அந்த முயற்சிகளை கௌரவிக்கின்றது.
  • இந்தப் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு வெற்றியாளர்களும் தலா 1 மில்லியன் குரோனரை (103,000 டாலர்) பெற இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்