TNPSC Thervupettagam

மாலத்தீவிற்கு முதலாவது நேரடி சரக்குப் படகுச் சேவை

September 24 , 2020 1433 days 587 0
  • இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய இரண்டு நாடுகள் தங்களுக்கிடையேயான வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக முதலாவது நேரடி சரக்குப் படகுச் சேவையைத் தொடங்கியுள்ளன.
  • இந்தச் சரக்குப் படகுச் சேவையானது இந்தியாவில் உள்ள தூத்துக்குடி மற்றும் கொச்சின் துறைமுகங்களை மாலத்தீவில் உள்ள குல்குதுக்பூசி மற்றும் மாலித் துறைமுகங்களுடன் இணைக்கவுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது இந்த 2 நாடுகளுக்கிடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு ஏற்படும் பயணச் செலவு மற்றும் பயண நேரம் ஆகியவற்றின் குறைப்பிற்கு உதவ இருக்கின்றது.
  • இந்திய மற்றும் மாலத்தீவுத் துறைமுகங்களை இணைப்பதற்காகப் பயன்படுத்தப் படும் சரக்குப் படகுக் கப்பலான எம்சிபி லின்ஸ் (MCP Linz) ஆனது இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்தினால் இயக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்