தமிழக மாநிலத்தில் நலத் திட்டங்களை ஒருங்கிணைக்கவும், திட்டங்களை விரைவுப் படுத்தவும், அவை செயல்படுத்தப் படுவதைக் கண்காணிக்கவும் வேண்டி குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்குப் பொறுப்பான சில அமைச்சர்களை மாநில அரசு மாற்றி அமைத்து உள்ளது.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி அன்று ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தின் போது நலத் திட்டங்களைக் கண்காணிக்கவும், அவசரகாலப் பணிகளை மேற்கொள்ளச் செய்வதற்காகவும் வேண்டி 14 குறிப்பிட்ட மாவட்டங்களுக்குப் பொறுப்பாளராக தனது அமைச்சரவை சகாக்களை மாநில அரசாங்கம் நியமித்தது.
தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டப் பிறகு அந்த 16 மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களாக பல்வேறு அமைச்சர்கள் பொறுப்பேற்பர்.