TNPSC Thervupettagam

மாவட்ட அளவில் PFMS

November 1 , 2020 1359 days 570 0
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது மாவட்ட அளவில் பொது நிதியியல் மேலாண்மை அமைப்பை (Public Financial Management - PFMS) செயல்படுத்திய நாட்டின் முதலாவது ஒன்றியப் பிரதேசமாக உருவெடுத்துள்ளது.
  • PFMS என்பது இந்திய அரசின் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர், செலவினத் துறை, நிதித்துறை அமைச்சகம், ஆகியவற்றினால் மேம்படுத்தப்பட்டு, செயல்படுத்தப் படும் இணைய வழி அடிப்படையிலான ஒரு நிகழ்நேர மென்பொருள் செயலியாகும்.
  • PFMS ஆனது இந்திய அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியைக் கண்காணிப்பதற்காகவும் திட்டத்தைச்  செயல்படுத்துதலில் அனைத்து நிலைகளிலும் அரசுச் செலவினத்தை நிகழ்நேரத்தில் பதிவு செய்வதற்காகவும் வேண்டி 2009 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்