நியூசிலாந்து அரசானது உலகளாவிய நிதியம் (World Wide Fund) மற்றும் சில மீன்பிடி நிறுவனங்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி ஒரு ஆளில்லா விமானத்தினை (Drone) வடிவமைக்க உள்ளது.
மாவி (Maui) ஓங்கில்கள் நியூசிலாந்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே காணப் படுகின்றன.
இவை உலகளவில் காணப்படும் சிறிய வகை ஓங்கில்களின் சிற்றினங்களுன் ஒன்று ஆகும்.
உலகில் 63 மாவி ஓங்கில்கள் மட்டுமே உள்ளன.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியமானது மாவி ஓங்கில்களை “மிகவும் அருகி வரும் இனங்கள்” (Critically Endangered Species) என்ற பட்டியலில் சேர்த்துள்ளது.