அண்மையில் வெளியிடப்பட்ட மாஸ்டர்கார்டு பெண் தொழில்முனைவோர்கள் குறியீட்டின் இரண்டாவது பதிப்பில், 57 நாடுகளுள் இந்தியா 52வது இடத்தைப் பெற்றுள்ளது.
வங்கதேசம், எகிப்து, அல்ஜீரியா, சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளை முந்திய நிலையில் மட்டுமே இந்தியா உள்ளது.
தரவரிசையில் எத்தகு மாற்றமும் பெறாமல் கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் இந்தியா 52வது இடத்தில் உள்ளது.
இந்த அறிக்கைப்படி, கலாச்சாரச் சார்புகளின் (Cultural Bias) காரணமாக இந்திய பெண் வணிக உரிமையாளர்கள், தலைவர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் வணிக உரிமையாளர் முறையை (business ownership) நோக்கி குறைந்த அளவு விருப்பத்தையே வெளிப்படுத்துகின்றனர்.
பல்வேறு வணிக ஆதரவு நிலைகளின் (supporting conditions) மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை தங்களுடைய உள்ளூர் வணிக சூழலுக்குள் பெருக்கிக் கொள்வதற்கு பெண் தொழில்முனைவோர்களுக்கு உள்ள திறனை அளவிடும் குறியீடே மாஸ்டர்கார்டு குறியீடாகும்.