TNPSC Thervupettagam

மிகக்குறைவான வேலைவாய்ப்பின்மை வீதம் – சத்தீஸ்கர்

April 12 , 2022 832 days 398 0
  • சத்தீஸ்கர் மாநிலமானது மார்ச் மாதத்தில் குறைவான வேலைவாய்ப்பின்மை வீதத்துடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியப் பொருளாதார அமைப்புகளை கண்காணிக்கும் மையத்தினால் சமீபத்தில் வெளியிடப் பட்ட வேலைவாய்ப்பின்மை அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டு உள்ளது.
  • சத்தீஸ்கரில் வேலைவாய்ப்பின்மை வீதம் ஆனது இதுவரையில் இல்லாத அளவில் குறைவான நிலையை (0.6%) எட்டியுள்ளது.
  • இந்திய நாட்டின் வேலைவாய்ப்பின்மை வீதம் 7.5% ஆகும்.
  • இதில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 8.5% மற்றும் கிராமப்புற வேலை வாய்ப்பின்மை 7.1% ஆகும்.

குறிப்பு

  • கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான ஒரு பொருளாதார இணைப்பினை அதிகரிப்பதை வலியுறுத்தும் நோக்கில், உள்ளார்ந்த வளர்ச்சி என்ற ஒரு இலக்கினை நிறுவும் நடவடிக்கையில், மகாத்மா காந்தியின் ‘கிராம் சுவராஜ்’ என்ற நோக்கத்திற்கு இணங்க 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் அரசு ஒரு புதிய மாதிரியை நடைமுறைப் படுத்தியது.
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 12 முதல் 15 லட்சம் வரையிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ரோஸ்கர் (வேலைவாய்ப்பு) என்ற ஒரு திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்