முதன்முறையாக விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உணவுக்குழாய்க்குரிய உயிர் உறுப்பை வளர்த்துள்ளனர். மிகச்சிறிய அளவுடைய இதை மனிதனின் உணவுக்குழாயின் செயல்பாட்டுத்திறனுடைய பல்திறன் கொண்ட ஸ்டெம் செல்லைக் கொண்ட ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.
இந்த உயிர்ப்பொறியியல் சார்ந்த உயிர்வகை உறுப்புகளானது குடல் சீர்கேடுகளுக்கு எதிரான மருந்துகள் குறித்த ஆய்வு மற்றும் சோதனைக்கு புதிய வழிகளை வகுக்கிறது.
மேலும், உயிரிமயமாக்கப்பட்ட மரபு ரீதியாக பொருந்திய உணவுக்குழாய்க்குரிய திசுவானது தனிப்பட்ட நோயாளிகளுக்கும் இடமாற்றம் செய்ய உதவும்.
இது பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகளான உணவுக்குழாய் துவாரமின்மை, உறுப்பு செயலிழப்பு, உணவுக்குழல் அழற்சி, பாரட்டின் அணு உருமாற்ற கோளாறு போன்றவற்றைக் குறித்து ஆய்வு செய்யவும் உதவுகிறது.