TNPSC Thervupettagam

மிகப்பெரியப் பால வளைவு

November 8 , 2017 2446 days 805 0
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரேசி மாவட்டத்தில் செனாப் நதியின் மேல் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான பாலத்தில் முக்கிய பாலத்தாங்கு வளைவு கட்டமைப்பை இந்திய இரயில்வே தொடங்கியுள்ளது.
  • செனாப் நதிப் பாலமானது உலகின்  மிக உயரமான ரெயில் பால வளைவுடைய பாலமாகும்.
  • இந்த பாலமானது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு நேரடி வழி இணைப்பை ஏற்படுத்தும்.
  • உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா இரயில் இணைப்பு திட்டம் எனும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக கத்ரா – பனிஹால் பிரிவினில் செனாப் நதியின் மேல் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
  • இந்த செனாப் நதிப் பாலமானது டெல்லியின் குதூப்மினார் கோபுரத்தை விட ஐந்து மடங்கும், பாரிஸின் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டரும் உயரமானது.
  • இப்பாலமானது 1315 மீட்டர் நீளமும், செனாப் நதி படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.
  • 120 வருட ஆயுட்கால உத்தரவாதமும், மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் இரயிலை ஓட்டும் வகையிலும் இப்பாலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்