TNPSC Thervupettagam

மிகப்பெரிய ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு

September 4 , 2020 1547 days 747 0
  • ரஷ்யாவானது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு வெடிப்பின் 40 நிமிட காணொலியை வெளியிட்டுள்ளது.
  • இந்த குண்டானதுசார் குண்டு” (Tsar Bomb) என்று அழைக்கப் படுகின்றது.
  • இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணு குண்டுகளான லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் ஆகியவற்றை விட 3,333 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது.
  • ஹைட்ரஜன் குண்டானது முதன்முறையாக ஆர்க்டிக் கடலில் உள்ள தீவுக் கூட்டமான நோவாயா ஜெம்லயாவில் பரிசோதிக்கப் பட்டது.
  • வெளியிடப்பட்ட இந்தக் காணொலியானதுமிகவும் இரகசியமான 50 மெகா டன்களுடன் தூய ஹைட்ரஜன் குண்டின் சோதனைஎன்று பெயரிடப் பட்டுள்ளது.
  • பிரிட்டன், அமெரிக்கா, இரஷ்யா, பிரான்சு மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஹைட்ரஜன் குண்டு சோதனையை மேற்கொண்டுள்ளன.
  • இதுவரை ஹைட்ரஜன் குண்டுகள் எந்தவொரு போரிலும் பயன்படுத்தப்பட வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்