மிகவும் வன்முறை மிக்க பயங்கரவாதத்தினைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 12
February 14 , 2025 9 days 87 0
மிகவும் வன்முறை மிக்க பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் ஆனது தீவிரவாதத்திற்கு ஏதுவானதாக மாறுவது குறித்த மிகப்பெரும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இது தொடர்பாக சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபையினால் நிறுவப்பட்ட இத்தினமானது, 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.
மிகவும் வன்முறை மிக்க பயங்கரவாதத்தின் ஒரு உலகளாவிய எழுச்சியை நிவர்த்தி செய்வதற்காக, 2016 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதியன்று மிகவும் வன்முறை மிக்க பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான செயல் திட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்தியது.
இந்தக் கட்டமைப்பு ஆனது, பாதுகாப்பு அடிப்படையிலான ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அப்பாலான ஒரு விரிவான அணுகுமுறையை வலியுறுத்துகிறது.