இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மொழிகள் பேசப்படும் மாநிலங்களில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
பெங்களூருவில் 107 மொழிகளுடன் 22 பட்டியலிடப்பட்ட மற்றும் 84 பட்டியலிடப்படாத மொழிகள் உட்பட பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.
பெங்களூருவில் 44.5% மக்கள் கன்னட மொழியினையும், 15% மக்கள் தமிழ் மொழியினையும், 14% மக்கள் தெலுங்கு மொழியினையும், 12% மக்கள் உருது மொழியினையும், 6% மக்கள் இந்தி மொழியினையும் மற்றும் 3% மக்கள் மலையாள மொழியினையும் பேசுகின்றனர்.
100 மொழிகளுக்கு மேல் பேசப்படும் இதர மாவட்டங்கள் நாகாலாந்திலுள்ள திமாப்பூர் (103) மற்றும் அசாமிலுள்ள சோனித்பூர் (101) ஆகியனவாகும்.
குறைவான பன்மொழி வேற்றுமையுடைய மாவட்டங்கள் புதுச்சேரியிலுள்ள ஏனாம், பீகாரிலுள்ள கைமூர், உத்தரப் பிரதேசத்திலுள்ள கௌசாம்பி மற்றும் கான்பூர் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் ஆகியவனவாகும்.
இந்த மாவட்டங்களில் 20க்கும் குறைவான மொழிகளே பேசப்படுகின்றன.
இதற்கான தரவுகளில் பேச்சுவழக்கு மொழிகள் இடம் பெறவில்லை ஆதலால் பட்டியலிடப் பட்ட மற்றும் பட்டியலிடப் படாத மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.