TNPSC Thervupettagam

மிகுந்த மொழிசார் வேற்றுமை

September 14 , 2021 1076 days 439 0
  • இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மொழிகள் பேசப்படும் மாநிலங்களில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
  • பெங்களூருவில் 107 மொழிகளுடன் 22 பட்டியலிடப்பட்ட மற்றும் 84 பட்டியலிடப்படாத மொழிகள் உட்பட பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.
  • பெங்களூருவில் 44.5% மக்கள் கன்னட மொழியினையும், 15% மக்கள் தமிழ் மொழியினையும், 14% மக்கள் தெலுங்கு மொழியினையும், 12% மக்கள் உருது மொழியினையும், 6% மக்கள் இந்தி மொழியினையும் மற்றும் 3% மக்கள் மலையாள மொழியினையும் பேசுகின்றனர்.
  • 100 மொழிகளுக்கு மேல் பேசப்படும் இதர மாவட்டங்கள் நாகாலாந்திலுள்ள திமாப்பூர் (103) மற்றும் அசாமிலுள்ள சோனித்பூர் (101) ஆகியனவாகும்.
  • குறைவான பன்மொழி வேற்றுமையுடைய மாவட்டங்கள் புதுச்சேரியிலுள்ள ஏனாம், பீகாரிலுள்ள கைமூர், உத்தரப் பிரதேசத்திலுள்ள கௌசாம்பி மற்றும் கான்பூர் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள  அரியலூர் ஆகியவனவாகும்.
  • இந்த மாவட்டங்களில் 20க்கும் குறைவான மொழிகளே பேசப்படுகின்றன.
  • இதற்கான தரவுகளில் பேச்சுவழக்கு மொழிகள் இடம் பெறவில்லை ஆதலால்  பட்டியலிடப் பட்ட மற்றும் பட்டியலிடப் படாத மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்