வடகிழக்கு இந்தியாவில், அதிலும் குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் “நெல் தவளை” என்ற ஒரு புதிய இனத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது மிக்ரிலெட்டா அய்சானி என்று பெயரிடப்பட்டு இருக்கின்றது.
சமஸ்கிருதத்தில் அய்சானி என்பது வடகிழக்கைக் குறிக்கும்.
மிக்ரிலெட்டா பேரினத்தின் கீழ் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில் 5-வது இனமாக அய்சானி தவளை உருவெடுத்துள்ளது.
இந்தப் பேரினங்கள் குறுகிய வாய் கொண்ட தவளைக் குழுக்களாகும். இது நெல் தவளை என்று பொதுவாக அறியப்படுகின்றது. இது தெற்கு ஆசியாவில் முதன்மையாகவும் பரவலாகவும் காணப்படுகின்றது.