TNPSC Thervupettagam

மிக அதிக எண்ணிக்கையிலான குழந்தை திருமணம் பதிவு

October 18 , 2022 642 days 337 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது சமீபத்தில் ஒரு மக்கள்தொகை குறித்த ஒரு கணக்கெடுப்பினை மேற்கொண்டது.
  • இந்தத் தரவுகளின்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான் குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு அதிக எண்ணிக்கையில் திருமணம் செய்து வைக்கப் படுவதாக பதிவாகியுள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில், 18 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையானது அதிகபட்சமாக 5.8 சதவீதமாக உள்ளது.
  • 18 வயதை அடையும் முன் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 1.9% ஆகவும், கேரளாவில் 0.0 % முதல் ஜார்க்கண்டில் 5.8 % வரையிலும் பதிவாகியுள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதிவாகும் குழந்தை திருமணங்கள் கிராமப்புறங்களில் 7.3 சதவீதமும், நகர்ப்புறங்களில் மூன்று சதவீதமும் பதிவாகியுள்ளன.
  • ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 21 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப் படுகின்றனர்.
  • மேற்கு வங்காளத்தில் 54.9 சதவீதப் பெண்கள் 21 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்ற நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இது 54.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.
  • இதன் தேசிய சராசரி அளவு 29.5 சதவீதம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்