TNPSC Thervupettagam

மிக ஆழமான பகுதியில் தென்பட்ட மீன்

April 15 , 2023 462 days 209 0
  • சமீபத்தில் நீருக்கடியில் சுமார் 8 கிலோமீட்டர் ஆழத்தில் மீன்கள் நீந்தியக் காட்சிகளை அறிவியலாளர்கள் படம் பிடித்துள்ளனர்.
  • இது இதுவரையில் பதிவு செய்யப்படாத மிக ஆழமான பகுதியில் தென்பட்ட மீன் என்ற புதிய ஒரு சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இது சூடோலிபாரிஸ் இனத்தைச் சேர்ந்த, இதுவரை அறியப்படாத நத்தை மீன் இனம் ஆகும்.
  • இது ஜப்பானின் தென்கிழக்கில் உள்ள இசு-ஒகசவாரா என்ற அகழியில் 8,336 மீட்டர் ஆழத்தில் படம் பிடிக்கப் பட்டது.
  • ஜப்பான் அகழியில் 8,022 மீட்டர் ஆழத்தில், சூடோலிபாரிஸ் பெல்யாவி இனத்தைச் சேர்ந்த மற்ற இரண்டு நத்தை மீன்களையும் அறிவியலாளர்கள் படம் பிடித்தனர்.
  • நீருக்கடியில் 8,000 மீட்டர் ஆழத்தில், அழுத்தமானது கடல் மேற்பரப்பில் உள்ளதை விட 800 மடங்கு அதிகமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்