மிக பிரகாசமாக ஒளிரும் பொருள்
March 27 , 2024
243 days
353
- ஆஸ்திரேலியாவில் உள்ள வானியலாளர்கள் குழு ஒன்று, மிகப்பெரிய கருந்துளையின் மூலம் ஆற்றலை பெறும் மாபெரும் துடிப்பண்டத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
- இது நமது சூரியனின் பிரகாசத்தை விட 500 டிரில்லியன் மடங்கிற்கும் அதிகமான ஒரு பிரகாசத்தினைக் கொண்டுள்ளது.
- இந்த துடிப்பண்டத்தின் (குவாசர்) மையத்தில் உள்ள கருந்துளை நமது சூரியனை விட 17 பில்லியன் மடங்கு அதிக நிறை கொண்டது.
- ஒவ்வொரு நாளும் நமது சூரியனின் அளவுக்கு இணையான ஒரு நிறையை இது உள்ளீர்க்கிறது.
- இந்தப் பேரளவிலான உள்ளீர்ப்பு ஆனது, குவாசரின் ஒளிர்தலுக்கு ஆற்றலூட்டுவதால், இது பிரகாசமாக ஒளிர்கிறது.
- அதன் ஒளியானது 12 பில்லியன் ஆண்டுகள் என்ற மிக அதிக தொலைவு பயணித்துப் புவியை அடையும்.
Post Views:
353