TNPSC Thervupettagam

மிக விரைவான 20,000 ரன்கள்

June 28 , 2019 1979 days 662 0
  • 2019 ஆம் ஆண்டின் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் மான்செஸ்டரில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் 6-வது ஆட்டத்தில், விராட் கோலி 37 ரன்களை எடுத்தபோது சர்வதேச அளவில் 20,000 ரன்களை மிக விரைவாகக் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • கோலி தன்னுடைய 417-வது போட்டியில் 20,000 ரன்களை எட்டினார் (131 டெஸ்ட் போட்டிகள், 223 ஒரு நாள் போட்டிகள், 62 இருபது ஓவர் போட்டிகள்).
  • சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்த 453 போட்டிகளை எடுத்துக் கொண்டனர்.
  • ரிக்கி பாண்டிங் தன்னுடைய 468-வது போட்டியில் 20,000 ரன்களை எட்டினார்.
  • ஒட்டுமொத்தமாக, சர்வதேச அளவில் 20,000 ரன்களை எட்டிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்து, இச்சாதனையை நிகழ்த்திய 3-வது இந்திய வீரர் மற்றும் உலகின் 12-வது பேட்ஸ்மேன் விராட் கோலி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்