மிசிங் பழங்குடியினர் - அலி ஐ லிகாங் திருவிழா
February 24 , 2025
9 days
142
- அசாம் மாநிலத்தின் மிசிங் பழங்குடியினர், சமீபத்தில் அலி அய் லிகாங் என்ற ஒரு திருவிழாவைக் கொண்டாடினர்.
- அவர்கள் அசாமில் உள்ள மிகப் பெரியப் பழங்குடியினச் சமூகமாகும்.
- சில உள்ளார்ந்த வேளாண் மரபுகளைக் கொண்ட இந்தத் திருவிழாவானது, விதைப்புப் பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
- இது பழங்காலத்திலிருந்தே மிசிங் சமூகத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- இந்தத் திருவிழாவில் ஆண்களும், பெண்களும் தாளத்திற்கு ஏற்றவாறு ஆடுகின்ற ஒரு பாரம்பரிய கும்ராக் நடனமும் அடங்கும்.
- அவர்கள் திபத்திய - பர்மிய மொழிகளைப் பேசும் தானி சமூகத்தின் ஒரு பகுதியினர் ஆவர்.

Post Views:
142