மிசிசிபியில் நடைபெற்ற U.S. செனட் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சிண்டி ஹைட்-ஸ்மித் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான மைக் எஸ்பியைத் தோற்கடித்தார்.
மிசிசிபியில் இருந்து செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஹைட் சுமித் ஆவார்.வெர்மாண்ட் மாகாணம் மட்டுமே இதுவரை காங்கிரஸிற்கு பெண் உறுப்பினர்களைத் தேர்தெடுக்காத ஒரே மாகாணமாக உள்ளது.
ஹைட் ஸ்மித்தின் இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் 24 பெண்கள் செனட்டில் இடம் பெறுவர்.
இது செனட்டில் பணிபுரியும் பெண்களுக்கான புதிய வரலாற்றை உருவாக்கும். இது தற்போது காங்கிரஸ் அவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒன்று அதிகமாகும்.