TNPSC Thervupettagam

மிசோரத்தில் வன உரிமைச் சட்டம் - ரத்து

November 22 , 2019 1705 days 586 0
  • மிசோரம் அரசானது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 (வன உரிமைகள் சட்டம்) என்ற சட்டத்தை ரத்து செய்துள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் 371 (ஜி) பிரிவின் கீழ் அம்மாநில அரசு அனுபவித்து வரும் சிறப்பு அங்கீகாரத்தை இச்சட்டம் மீறியுள்ளது என்ற அடிப்படையில் இச்சட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது.
  • பிரிவு 371 (ஜி)ன் கீழ், நில உடைமை மற்றும் இடமாற்றம் தொடர்பான நாடாளுமன்றத்தின் அனைத்துச் சட்டங்களும் மாநிலத்தில் செயல்படுத்தப் படுவதற்கு முன்னர் முதலில் ஒரு தீர்மானத்தின் மூலம் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட வேண்டும்.
  • வன உரிமைகள் சட்டம், 2006 என்பதை ரத்து செய்வதன் மூலம், மிசோரமில் உள்ள வன நிலங்களை அதற்குச் சொந்தமான பாரம்பரிய சமூகங்கள் மற்றும் மாநில வனத் துறை ஆகியவை தமது கட்டுக்குள் வைத்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்