மிசோரம் மாநில உருவாக்க தினம் - பிப்ரவரி 20
February 25 , 2025
8 days
43
- 1967 ஆம் ஆண்டில் தனி மிசோ மாநிலத்தைக் கோருவதற்காக வேண்டி மிசோ தேசிய முன்னணி (MNF) அமைப்பானது உருவாக்கப்பட்டது.
- 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டத்தின் கீழ் மிசோரம் ஆனது 1972 ஆம் ஆண்டில் ஒரு தனி ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
- 1986 ஆம் ஆண்டில் இந்திய நாட்டு அரசாங்கத்திற்கும் மிசோ தேசிய முன்னணிக்கும் இடையே மிசோரம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்திய அரசியலமைப்பின் 53வது திருத்தத்திற்குப் பிறகு 1987 ஆம் ஆண்டில் மிசோரம் இந்தியாவின் 23 வது மாநிலமாக மாறியது.
- இந்த மாநிலத்தில், அதன் மொத்த புவியியல் பரப்பளவில் 85.4% காடுகளைக் கொண்டு உள்ளது (இந்தியாவில் மிக அதிக வனப் பரவல் கொண்டது).
- இது 91.58% கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளதுடன், இந்தியாவில் அதிக கல்வி அறிவு கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும்.

Post Views:
43