சுதந்திரத்தின் போது மிசோ மலைக்குன்றுகள் பகுதி ஆனது அசாம் மாநிலத்தின் லுஷாய் மலைப்பாங்கு மாவட்டமாக மாறியது.
மேலும், 1954 ஆம் ஆண்டில் இது அசாம் மாநிலத்தின் மிசோ மலைக்குன்றுகள் மாவட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
மிசோ தேசிய முன்னணி (MNF) அமைப்பின் மிதவாதிகளுடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்துதானதை அடுத்து 1972 ஆம் ஆண்டில் மிசோரத்திற்கு ஒன்றியப் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது.
மத்திய அரசிற்கும் MNF அமைப்பிற்கும் இடையே மிசோரம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து 1986 ஆம் ஆண்டில் மிசோரம் ஒன்றியப் பிரதேசம் முழு மாநில அந்தஸ்து பெற்றது.
1986 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 53வது சட்டத் திருத்தத்திற்குப் பிறகு 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டது.
மிசோரம் ஆனது, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் (பிரிவு 244(2)) "பழங்குடியினர் பகுதி" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.