மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அமைந்துள்ள உயிர் ஆதாரங்கள் மற்றும் நீடித்த ஆய்வகம் (IBSD- Bio resources and Sustainable Laboratory) வடகிழக்கு இந்தியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான லோக்டக் ஏரியில் (Loktak) ஏரியினுடைய நீரின் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பதற்கும், நீரின் தரத்தை அதிகரிக்கவும் மிதக்கும் ஆய்வகம் (floating laboratory) ஒன்றை அமைத்துள்ளது.
இந்த ஆய்வகம் மூலம் ஏரியில் உள்ள நீர்த்தாவரங்களை இயற்கை உரங்களாக மாற்றுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஏரியின் கரைகளில் வசிப்பவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பரிந்துரைகளும் வழங்கப்படும்.
இந்த முயற்சியானது ஏரியினுடைய பாதுகாப்பிற்கும், நீடித்த மேம்பாட்டிற்கும் உதவியாக அமையும். மேலும் இதன் மூலம் ஏரியின் கரைகளில் வசிப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இயலும்.