TNPSC Thervupettagam

மிதக்கும் சுத்திகரிப்பு தீவு – நெக்நம்பூர் ஏரி

February 7 , 2018 2483 days 924 0
  • உலக ஈர நிலங்கள் தினத்தன்று (World Wetlands day) மிதக்கும் சுத்திகரிப்பு ஈர நிலம் ஒன்று (Floating Treatment Wetland-FTW) மாசடைந்த நீர்நிலையினை தூய்மைப்படுத்தி சுத்திகரிப்பதற்காக ஹைதராபாத்திலுள்ள நெக்னம்பூர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஏரி நீரிலுள்ள அதிகப்படியான நைட்ரேட் மற்றும் ஆக்ஸிஜன் மாசுபடுத்திகளை உறிஞ்சி நீரினை சுத்திகரிக்கவல்ல தாவரங்கள் இந்த சதுப்பு நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளன.
  • ஹைதராபாத் மாநகர மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரங்கா ரெட்டி மாட்ட நிர்வாகத்தின் முயற்சியால் இந்த மிதக்கும் சுத்திகரிப்பு ஈரநிலம் அமைக்கப்பட்டுள்ளது.
  • மண் பயன்பாடற்ற ஹைட்ரோபோனிக்ஸ் முறையின் அடிப்படையில் இந்த மிதக்கும் சுத்திகரிப்பு ஈரநிலம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த மிதக்கும் சதுப்பு நிலமானது நாட்டின் மிகப்பெரிய மிதவை சுத்திகரிப்பு சதுப்புநிலமாக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • வெட்டிவேர், செம்பருத்தி, சிட்ரோனெல்லா, துளசி, அஷ்வகந்தா, பூக்கும் மூலிகைகள் போன்ற பல்வேறு மாசுக்களை உறிஞ்சி ஏரியை தூய்மைப்படுத்தவல்ல தாவரங்கள் இந்த மிதக்கும் சதுப்பு நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்