டெல்லியின் நீர் வாரியமானது மாசுக்களை உறிஞ்சவும், நீரை சுத்திகரிக்கவும் நீர் நிலைகளில் மிதக்கும் தீவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தீவுகளானது ஹார்மோன் முறையில் தீர்வளிக்கும் தாவரங்களின் தொகுப்பாக உள்ளது.
சிறு தீவுகள் அளவிலான இந்த மிதக்கும் சதுப்பு நிலங்களானது நீர் நிலைகளில் உள்ள ஊட்டச் சத்துக்களை உறிஞ்சும் தாவரங்களைக் கொண்டுள்ளது.
இந்த உள்நாட்டுப் புத்தாக்கமானது, நீரினை மீன்களுக்கு ஏற்றதாக மாற்றவும் அந்த ஏரிச் சூழலியலைத் தன்னைத் தானே சுயமாக சுத்தம் செய்யக் கூடியவையாகவும் மாற்றக் கூடியது ஆகும்.