TNPSC Thervupettagam

மிதக்கும் தீவு

March 28 , 2018 2306 days 695 0
  • மனிதர்கள் வாழாத மற்றும் சேறாக உள்ள வங்காள விரிகுடாவில் உள்ள தீவு, இராணுவ ஒடுக்கு முறைகள் காரணமாக மியான்மரை விட்டு வெளியேறிய 1,00,000 ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு இருப்பிடமாக மாறுகிறது.
  • பசன் சார் (பொருள் - மிதக்கும் தீவு) என்ற பெயரிடப்பட்டுள்ள வங்காள விரிகுடாவில் உள்ள இந்தத் தீவில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தங்குவதற்கு வங்கதேச அரசால் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • இந்த மிதக்கும் தீவு 20 ஆண்டுகளுக்கு முன்னர் வண்டல் படிவுகளினால் உருவான பகுதியாகும் (Emerged from the Silt). இது நிலப்பரப்பிலிருந்து 30 கி.மீ (21 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.
  • ரோஹிங்கியர்களை தாழ்வான பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவில் குடியேற்றுவது என்பது தற்காலிக ஏற்பாடுதான் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெளிவுபடுத்தியுள்ளார்.
  • இந்த தற்காலிக ஏற்பாடு வங்கதேசத்தின் காக்ஸ் பஸாரில் உள்ள முகாமில் நெரிசலைக் குறைக்க உதவும். காக் பஸார் முகாமில் ஆகஸ்ட் 2017லிருந்து, மியான்மரிலிருந்து வெளியேறி வந்த 7,00,000 ரோஹிங்கியர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்